சென்னையில் எம்.ஜி.ஆர். திருவுருவ சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் - தமிழகத்தில் மக்களுக்கும் பாதுகாப்பில்லை - தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் உருவாகிவிட்டதாக வேதனை

Sep 27 2022 3:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் புரட்சித்தலைவரின் திருவுருவச் சிலையை சேதப்படுத்தியதற்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அமைதிக்‍கு குந்தகம் விளைவிக்‍கும் செயல்கள் நடைபெறாத வகையில், தமிழக அரசு இரும்புக்‍கரம் கொண்டு அடக்‍க வேண்டும் என்றும், சிலையை அவமதிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்றும் சின்னம்மா கேட்டுக்‍கொண்டுள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், சென்னை தேனாம்பேட்டையில் நிறுவப்பட்டு இருந்த பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவரின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய செயல் மிகவும் கண்டிக்‍கத்தக்‍கது - இந்த இழிசெயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

புரட்சித்தலைவரின் திருவுருவச்சிலையை சேதப்படுத்தியவர்களுக்‍கு ஒன்றை மட்டும் சொல்லிக்‍ கொள்கிறேன் - பகைவருக்‍கு கூட பாசத்தை காட்டும் எங்கள் புரட்சித்தலைவரின் அப்பழுக்‍கற்ற முகத்தினை சேதப்படுத்த உங்களுக்‍கு எப்படி மனம் வந்தது? - நீங்கள் கண்டிப்பாக இதயமே இல்லாத ஒரு பிறவியாகத்தான் இருக்‍கக்‍கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது - எங்கள் பாசத்தலைவருடைய மக்‍கள் நலத்திட்டங்களால் உங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கூட ஏதாவது ஒரு விதத்தில் கண்டிப்பாக பயனடைந்தவர்களாகத்தான் இருக்‍க முடியும் என சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பாவச் செயலுக்‍கு பிராயச்சித்தமாக நீங்கள் எத்தனை கோவிலுக்‍கு சென்று வழிபட்டாலும் எந்தப் பரிகாரமும் கிடைக்‍கப்போவது இல்லை - இதுபோன்று, தலைவர்களின் திருவுருவச் சிலைகளை சேதப்படுத்துவதை விட்டுவிடுங்கள் - ஒரு தாயாக உங்களை கேட்டுக்‍கொள்கிறேன் - தயவு செய்து திருந்தப் பாருங்கள் - உங்கள் குடும்பத்தினருக்‍கு பாவமூட்டைகளை சேர்த்து வைக்‍காமல், நாலு பேருக்‍கு உதவிடும் வகையில் நல்ல மனிதர்களாக வாழ முயற்சி செய்யுங்கள் என்று சின்னம்மா அறிவுறுத்தியுள்ளார்.

தி.மு.க ஆட்சியில், தமிழக மக்‍களுக்‍கும் பாதுகாப்பு இல்லை, தமிழக மக்‍களைக்‍ காப்பாற்றிய நம் தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்‍கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதற்கு தாம் மிகவும் வேதனை அடைகிறேன் - உண்மையான திராவிட சிந்தனை உள்ளவர்கள், திராவிட தலைவர்களின் பெயர்களையும், புகழையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமே தவிர, திராவிட மாடல் ஆட்சி நடத்துவதாக சொல்லிக்‍கொள்வதால் எந்தப் பயனும் இல்லை என்று சின்னம்மா தெரிவித்துள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்‍காலத்தில், சுதந்திரமாக தமிழக காவல்துறை செயலாற்றியது - அதேபோல், தற்போதும் செயல்பட்டு, இது போன்று தமிழகத்தில் அமைதிக்‍கு குந்தகம் விளைவிக்‍கும் செயல்கள் நடைபெறாத வகையில் இரும்புக்‍கரம் கொண்டு அடக்‍க வேண்டும் என்று சின்னம்மா கேட்டுக்‍கொண்டுள்ளார்.

இன்றைக்‍கும் தெய்வங்களாக நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்‍கும் நமது தலைவர்களின் திருவுருவச் சிலைகள் தொடர்ந்து சேதப்படுத்தப்படுவதை தடுக்‍கும் வகையில் உரிய பாதுகாப்பு அளிக்‍கின்ற நடவடிக்‍கைகளை விரைந்து எடுத்திட வேண்டும் - மேலும், இதுபோன்று நமது தலைவர்களின் திருவுருவச் சிலைகளை அவமதிப்பவர்கள், சேதப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்று தமிழக அரசை புரட்சித்தாய் சின்னம்மா கேட்டுக்‍கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00