மதுரையில் திமுக மாவட்ட செயலாளர் தேர்தலில் கோஷ்டி பூசல் : பணபேரம் நடப்பதால் சொகுசு விடுதியில் கும்மாளம் அடிக்‍கும் திமுக உடன்பிறப்புகள்

Sep 27 2022 5:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் திமுக மாவட்ட செயலாளர் தேர்தலில் கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. பணபேரம் நடப்பதால் இரண்டு தரப்பினரும் தங்களுக்‍கு ஆதரவான நிர்வாகிகளை சொகுசு விடுதியில் தங்க வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

திமுகவில் அமைப்பு ரீதியான தேர்தல் நடந்து வருகிறது. இதில் மாவட்ட செயலாளர் பதிவிகளுக்‍கான மனுதாக்கல் கடந்த 22ஆம் தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் இரண்டு தரப்பாக பிரிந்து கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய தெற்கு மாவட்ட செயலாளருமான கோ.தளபதிக்கும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர் அதலை செந்தில்குமாருக்‍கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக தமது ஆதரவாளரை நியமித்து, மதுரை மாநகர் முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக அதலை செந்தில்குமாரை எப்படியாவது மாவட்ட செயலாளராக வேண்டும் என முயற்சியில் பழனிவேல் தியாகராஜன் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மதுரை மாநகரில் உள்ள மாவட்ட பிரதிநிதி, வட்ட, பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட உட்கட்சி தேர்தலில் போட்டியிடக்கூடிய திமுக நிர்வாகிகளுக்கு 5லட்சம் ரூபாய் வரை பணத்தை வாரி இறைத்து அவர்களை சென்னை மாமல்லபுரம் பகுதியில் உள்ள ஆடம்பர விடுதியில் பதுக்கிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் கோ.தளபதி தரப்பு, அவர்களுடைய ஆதரவாளர்களை புதுச்சேரியில் உள்ள ஒரு ஆடம்பர தங்குவிடு தியில் ​தங்கவைத்துள்ளது. திமுகவில் உட்கட்சி மோதலால் மதுரை மாநகர திமுக உடன்பிறப்புகள் ஜாலியாக கும்மாளம் அடித்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00