தஞ்சை: வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் 4 இடங்களில் உடைப்பு
Sep 27 2022 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே, வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால், 4 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்கள் கடல்போல் காட்சியளிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். 300 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நேரடி விதைப்பு முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூர் பகுதியில் சுமார் 500 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நேரடி விதைப்பு செய்யப்பட்டு 20 நாட்கள் ஆகியுள்ளன. இந்நிலையில், கன மழை காரணமாக 300 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன. இந்த தண்ணீர் வடிய இன்னும் 10 முதல் 15 நாட்கள் ஆகும் என்பதால், தண்ணீர் வடிய வாய்ப்பில்லை என்றும், விதைகள் அனைத்தும் அழுகிவிடும் என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.