உலக சுற்றுலா தினம் உற்சாகக்‍ கொண்டாட்டம் : கலை நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்பு

Sep 27 2022 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. கடற்கரை கோயிலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலாத்துறை அதிகாரிகள், தமிழர் கலாச்சாரப்படி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், சத்துணவு பணியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கடற்கரை கோயிலில் இருந்து பேரணியாக புறப்பட்டு மாமல்லபுரம் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். ஐந்து ரதம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சத்துணவு பணியாளர்களின் ஊட்டச்சத்து வார விழா கண்காட்சி நடைபெற்றது.

சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு மலை ரயிலில் வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு நீலகிரி மாவட்டம் உதகை ரயில் நிலையத்தில் ரோஜா மலர் மற்றும் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. உலக சுற்றுலா தினம் குறித்தும் சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஓவியர் ஒருவர் மலை ரயிலை சுற்றுலா பயணிகள் முன்பு வரைந்து காட்டினார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊசிமலை காட்சி முனையில் பழங்குடியினர் பாரம்பரிய இசை நடனத்துடன் சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு அளித்தனர். கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ,மாணவியர் கலந்து கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு மலர்ச் செண்டு வழங்கியும் இனிப்பு வழங்கியும் வரவேற்றனர். பாரம்பரிய இசையுடன் பழங்குடியின பெண்கள் நடனமாடினர்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளில் செல்வதற்காக வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள், சங்கு, சிப்பி மாலைகளை சுற்றுலாத்துறை அதிகாரிகள் வழங்கி கவுரவித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00