திருச்சி சமயபுரம் காவல்நிலையத்தில் விசாரணைக்‍ கைதி மர்ம மரணம் - காவலர் பணியிடை நீக்கம்

Sep 27 2022 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

காவல் நிலையத்தில் விசாரணை கைதி மர்ம மரணம் தொடர்பாக பணியில் இருந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் காமராசவள்ளி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் மீது ஏற்கனவே தாயை கொலை செய்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், பக்தர்களிடம் செல்போன் திருடியதாக சமயபுரம் கோவில் காவலர் முருகானந்தத்தை பக்தர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அப்போது, காவல் நிலையத்தில் காவலர்கள் சுழற்சிப் பணியின் போது மாற்று காவலர்கள் வரும் நேரத்தில் அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் நீண்டநேரமாக வராததால் காவலர்கள் கழிவறைக்கு சென்றபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், இதுதொடர்பாக காவல் நிலையத்திற்கு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சமயபுரம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர் ராம்கி என்பவர் அலட்சியமாக பணியில் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, பணியில் அலட்சியமாக இருந்த காவலர் ராம்கியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவிட்டார். இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட விசாரணை கைதியின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00