கடந்த டிசம்பர் 2016-ல் அ.இ.அ.தி.மு.க. பொதுக்‍குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக்‍கோரி சின்னம்மா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்‍கு - அடுத்த மாதம் 26-ம் தேதி இறுதி விசாரணை

Sep 27 2022 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடந்த டிசம்பர் 2016-ம் ஆண்டு, அ.இ.அ.தி.மு.க. பொதுக்‍குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக்‍கோரி சின்னம்மா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்‍கில், அடுத்த மாதம் 26-ம் தேதி இறுதி விசாரணைக்‍காக வழக்‍கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சின்னம்மா மேல்முறையீடு வழக்‍கு தொடர்ந்தார். முழுமையாக விசாரணை நடத்தாமலும், தனது தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்காமலும் வழக்கை நிராகரித்தது தவறு என சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப நிலையிலேயே வழக்கை நிராகரிக்க முடியாது என்பதால், தனது வழக்கை நிராகரித்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்தார். இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இறுதி விசாரணைக்காக வழக்கை அக்டோபர் 26-ம் தேதிக்‍கு நீதிபதி ஒத்திவைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00