கும்பகோணம் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் போது தீ விபத்து : படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் அனுமதி

Sep 27 2022 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

கும்பகோணம் அடுத்த பாபநாசம் பகுதியில் நாட்டு வெடி தயாரிக்கும் போது நேரிட்ட விபத்தில் ஒருவர் காயம் அடைந்தார்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாபநாசம் அடுத்த சோழக நத்தம் கிராமத்தில் பிரபாகரன் என்பவரது நாட்டு வெடி தயாரிக்கும் கூடத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த ரவிச்சந்திரன் என்பவர் பலத்த காயம் அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்த நபர் உடனடியாக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பாபநாசம் வட்டாட்சியர், பாபநாசம் டிஎஸ்பி உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரபாகரன் எவ்வளவு வெடிபொருட்கள் வைத்துக்கொள்ள உரிமம் பெற்றுள்ளார்? எவ்வளவு வெடிப்பொருட்கள் இருப்பு இருந்தது? தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00