திருச்சி மாவட்டத்தில் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர் - வடிகால் வசதி அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

Sep 27 2022 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் நவல்பட்டு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில பகுதிகளில் வீட்டுக்குள் மழை நீர் புகுந்தது. குறிப்பாக திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு, அண்ணா நகர் பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தராததால் இதுபோன்ற நிலை மழைக்காலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே, பருவமழை தொடங்குவதற்கு முன்பு முறையான வடிகால் வசதி அமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00