வீடியோ கால் மூலம் மருத்துவருடன் பேசி செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில், குழந்தை இறந்த விவகாரம் - 6 வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய, பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

Sep 28 2022 9:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

வீடியோ கால் மூலம் மருத்துவருடன் பேசி செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில், குழந்தை இறந்த விவகாரம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய, பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே உள்ள ஆண்டார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவரின் மனைவி புஷ்பா, பிரசவத்திற்காக இல்லீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் இல்லாததால், செவிலியர்கள் மருத்துவரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பிரசவம் பார்த்தனர். இதில் புஷ்பாவுக்கு பிறந்த குழந்தை சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. இதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய பொது சுகாதார துறை இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00