சென்னை மாதவரத்தில் அமேசான் நிறுவனத்தில் கைபேசி உள்ளிட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருட்டு - ஊழியரை கைது செய்து புழல்சிறையில் அடைப்பு

Sep 28 2022 10:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

மாதவரத்தில் அமேசான் நிறுவனத்தில் கைபேசி உள்ளிட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த மாதவரத்தில் செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனத்தில் பொருட்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றபோது விலை உயர்ந்த 9 கைபேசிகள் உட்பட ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போனதை அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதே நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வந்த பெரம்பூரை சேர்ந்த கௌதம் என்பவர் அவற்றை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் அமேசான் நிறுவன மேலாளர் முத்து அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மாதவரம் காவல்துறையினர், டெலிவரி பாய் கௌதமை கைது செய்தனர். விசாரணையில் அமேசான் நிறுவனத்தில் இருந்து பொருட்களை களவாடி சென்று கள்ள சந்தையில் அதனை குறைந்த விலைக்கு விற்றது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்திய மாதவரம் காவல் துறையினர், நீதிமன்ற உத்திரவின் படி புழல் சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00