ஈரோட்டில் முன்கூட்டியே மாணவர்களுக்கு வினாத்தாள் கொடுத்து தேர்வு எழுதிய விவகாரம் - பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

Sep 28 2022 8:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டம் பவானியில் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முதல்பருவ தமிழ்தேர்வில் முன்கூட்டியே மாணவர்களுக்கு வினாத்தாள் கொடுத்து தேர்வு எழுதிய விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் பவானி காமராஜர் நகர் நடுநிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து முதல் பருவ தமிழ் தேர்வு நேற்று தேர்வு நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியராகவும், தமிழ் பாடப்பிரிவு ஆசிரியராகவும் பணியாற்றி வரும் கிருஷ்ணகுமாரி என்பவர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்ட தமிழ் தேர்வு வினாத்தாளை தேர்வு நடப்பதற்கு முன்பாக வழங்கி விடைகளை பார்த்து தேர்வு எழுதச் சொன்னதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பள்ளிக்கு வந்த பெற்றோர் இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து தலைமை ஆசிரியரிடம் கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, தகவலறிந்த பவானி மாவட்ட கல்வி அலுவலர், தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமாரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00