சென்னையில் ஊபர் ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி மாணவி புகார் - காவல்துறையினர் முறையாக விசாரிக்‍கவில்லை என்றும் குற்றச்சாட்டு

Sep 28 2022 11:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் ஊபர் ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி மாணவி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் முறையாக விசாரிக்‍கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் என்ற கல்லூரியில் மாணவ பத்திரிகையாளராக படித்து வரும் பெண் ஒருவர், சமூக வலைதளத்தில் புகார் அளித்துள்ளார். சோழிங்கநல்லூரில் தனியார் ஹோட்டலில் தான் தங்கியிருப்பதாகவும், தனது தோழியுடன் கிழக்‍கு கடற்கரை சாலையிலிருந்து நேற்றிரவு தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு ஊபர் ஆட்டோ மூலம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் தனக்‍கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்‍கச் சென்றபோது, அரை மணி நேரத்திற்குப் பின்னர் காவலர் விசாரணை நடத்தியதாகவும், தான் புகார் அளிப்பதை தடுக்‍கும் விதமாகவே காவலர் பேசியதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். மேலும், செம்மஞ்சேரி காவல்நிலையத்திற்கு வெளியிலேயே தனது புகாரை எழுதி வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். பெண் அளித்த புகார் சமூக வலைதளத்தில் பரவியதைத் தொடர்ந்து, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை தேடி வருவதாக தாம்பரம் காவல்துறை, சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00