சென்னையில் உள்ள தனியார் உணவகத்தில், ஏ.சி.யில் கேஸ் நிரப்பும்போது விபத்து - ஊழியர்கள் 4 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை

Sep 28 2022 8:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் உள்ள தனியார் உணவகத்தில், ஏ.சி.யில் கேஸ் நிரப்பும்போது திடீரென வெடித்துச் சிதறியதில், ஊழியர்கள் 4 பேர் காயமடைந்தனர்.

சென்னை வளசரவாக்கம் - ஆற்காடு சாலையில் உள்ள தனியார் உணவகத்தில், மொட்டை மாடியில் உள்ள ஏ.சி. கம்ப்ரஷருக்கு கேஸ் நிரப்பும் பணி நடைபெற்றது. இதில், மணிகண்டன், கிரிஷ்குமார், பாலமுருகன் மற்றும் ஆனந்த முருகன் ஆகிய 4 பேர் ஈடுபட்டனர். எதிர்பாராதவிதமாக கேஸ் எடுத்து வந்த சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதில் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு நாலாபுறமும் சிதறி விழுந்தனர். சத்தம் கேட்டதையடுத்து ஓட்டலில் இருந்த ஊழியர்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பலத்த காயமடைந்த நான்கு பேரும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏசியில் கேஸ் நிரப்பும்போது ஏற்பட்ட வெடி விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00