ஒன்று முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 12ம் தேதி வரை காலாண்டு விடுமுறை - 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு
Sep 28 2022 8:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை அக்டோபர் 12 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் அளவில் முதல் பருவ தேர்வுகள் கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10 முதல் 12 வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி நடப்பதால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.