அரியலூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மர்ம மரணம் - போலீசார் அடித்ததாலேயே உயிரிழந்தாக என உறவினர்கள் குற்றச்சாட்டு
Sep 28 2022 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவல் நிலையத்தில் விசாரணை கைதி மர்ம மரணம் தொடர்பாக பணியில் இருந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் காமராசவள்ளி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் மீது ஏற்கனவே தாயை கொலை செய்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், பக்தர்களிடம் செல்போன் திருடியதாக முருகானந்தத்தை சமயபுரம் கோவில் காவலர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காவல் நிலையத்தில் முருகானந்தம் மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் கிடந்தார். இதுதொடர்பாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் விசாரணை மேற்கொண்டு பணியில் அலட்சியமாக இருந்ததாக காவலர் ராம்கி என்பவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனிடையே, முருகானந்தத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, போலீசார் அடித்ததாலேயே முருகானந்தம் இறந்து விட்டதாகவும், போலீசார் கட்டுக்கதைகளை கூறுவதாகவும் உறவினர்கள் குற்றம்சாடியுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் ஆறாவது லாக்கப் மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.