தி.மு.க அரசு வன்முறை மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது - மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே குற்றச்சாட்டு
Sep 28 2022 11:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தி.மு.க அரசு வன்முறை மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக, மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு.அஸ்வினி குமார் சவுபே, Popular front of India அமைப்பு மீது மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தி.மு.க அரசு வன்முறையையும், தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கும் விதத்தில் செய்யும் காரியங்கள் கண்டிக்கத்தக்கவை என்று குறிப்பிட்ட சவுபே, வரும் தேர்தலில் தி.மு.க அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார். பின்னர் பாண்டிபஜாரில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு செய்த திரு.சவுபே, தான் வருவதை அறிந்துகொண்டு, மோடியின் படம் அங்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.