2017-ம் ஆண்டில், அ.இ.அ.தி.மு.க. பொதுக்‍குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக்‍கோரி சின்னம்மா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்‍கு - அடுத்த மாதம் 26-ம் தேதி இறுதி விசாரணை

Sep 28 2022 8:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக, புரட்சித்தாய் சின்னம்மா தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு மனுவின் இறுதி விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம் அடுத்த மாதம் 26-ம் தேதிக்‍கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

அ.இ.அ.தி.மு.க.வில், கடந்த 2017-ம் ஆண்டு பொதுச்செயலாளர் இல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்‍குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்‍கக்‍கோரியும், அதன் தீர்மானத்தை ரத்து செய்யக்‍கோரியும், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சின்னம்மா சார்பில் வழக்‍கு தொடரப்பட்டிருந்தது. இதில், சென்னை உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சின்னம்மா மேல்முறையீடு செய்திருந்தார்.

அந்த மேல்முறையீட்டு மனுவில், உரிமையியல் நீதிமன்றம், முழுமையாக விசாரணை நடத்தாமலும், தனது தரப்பு வாதங்களை முழுமையாக கேட்காமலும் வழக்கை நிராகரித்தது தவறு என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.எஸ்.சவுந்தர் முன் விசாரணைக்‍கு வந்தது. இந்த வழக்‍கை அவசர வழக்‍காக விசாரிக்‍க வேண்டுமென, சின்னம்மா தரப்பு வழக்‍கறிஞர் கேட்டுக்‍கொண்டார். இதனையடுத்து, இறுதி விசாரணைக்காக வழக்கை, அடுத்த மாதம் 26-ம் தேதி பிற்பகலுக்‍கு நீதிபதி ஒத்திவைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00