கள்ளக்‍குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணைக்‍கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த அறிக்கையில் தகவல்

Sep 28 2022 9:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

கள்ளக்‍குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்‍கில், விசாரணைக்‍கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

புலன் விசாரணை முடியும் வரை வழக்கு குறித்த ஆவணங்களை மாணவியின் பெற்றோர் தரப்புக்கு வழங்கக்‍கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், வழக்கின் புலன் விசாரணைக்கு மாணவியின் பெற்றோர் ஒத்துழைக்க மறுப்பதாகவும், விடுதியில் மாணவி பயன்படுத்திய மொபைல் ஃபோனை வழங்க மறுப்பதாகவும், மரபணு சோதனைக்கு மாதிரிகள் வழங்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து, மாணவி செல்போன் பயன்படுத்தி இருந்தால் அதை சிபிசிஐடி போலீசாரிடம் வழங்க வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடுத்த அறிக்கையை அக்டோபர் 10-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00