வால்பாறையில் எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட 3 காட்டு யானைகள் - 2 வீடுகளை இடித்து சேதப்படுத்தியதால் மக்கள் அச்சம்
Nov 27 2022 1:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் வால்பாறை அருகே 3 காட்டு யானைகள் இரண்டு வீட்டை இடித்து சேதப்படுத்தியதால் அங்குள்ள பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
வால்பாறை சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் நேற்று இரவு குடியிருப்பு பகுதிக்குள் மூன்று காட்டு யானைகள் நுழைந்தன. அங்குள்ள கோவில் ஜன்னலை உடைத்ததுடன், அருகில் இருந்த செந்தில்குமார், உமா ஆகியோரது வீடுகளின் ஜன்னல்களையும் சேதப்படுத்தின. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு 3 காட்டு யானைகளை வனப்பகுதியில் விரட்டினர். காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் வராமல் தடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.