மதுரை அருகே பேக்கரி கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து - சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் அலறி அடித்து ஓட்டம்
Nov 27 2022 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட விபத்தால் பதற்றம் நிலவியது. சுப்பிரமணியபுரம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான பேக்கரியில் சிலிண்டரை மாற்றும் போது திடீரென கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். பேக்கரியின் அருகே குடியிருப்பு பகுதிகள் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இதனிடையே கோமதிபுரத்தில் ஒரு வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியின் போது சிலிண்டர் ரெகுலேட்டரை மாற்றும் போது வாயு கசிந்து தீ பரவியதில் சமையல் பொருட்கள் தூக்கி விசப்பட்டன. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீ பரவாமல் தடுத்தனர்.