திருச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் உறவினருக்கு சொந்தமான மருத்துவமனையில் கட்டணக் கொள்ளை - நோயாளியிடம் காப்பீடு மூலம் பணம் செலுத்தலாம் என கூறிவிட்டு சிகிச்சைக்கு பிறகு மருத்துவக்காப்பீடு செல்லாது என அடாவடி...
Nov 27 2022 5:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில், இன்சூரன்ஸ் மூலம் மருத்துவம் எனக் கூறிவிட்டு, தற்போது பணம் கேட்டு மிரட்டுவதாக நோயாளி பகிரங்க புகார் தெரிவித்துள்ளார். மருத்துவமனை கேட்ட பணத்தை செலுத்தாததால்,
மருத்துவமனையிலேயே நோயாளி சிறை வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அமைச்சர் கே.என். நேருவின் உறவினர்களுக்கு சொந்தமான திருச்சி தென்னூர் பகுதியில் இயங்கும் கே.எம்.சி மருத்துவமனையில், சீர்காழி அடுத்த திருமுல்லை வாசல் கிராமத்தைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். தனது உணவுக்குழாயில் பிரச்சனை சம்பந்தமாக சிகிச்சைக்காக வந்த முரளிதரன், தன்னிடம் இன்சூரன்ஸ் இருப்பதாகவும், அதில் மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம், இன்சூரன்ஸ் திட்டத்தில் செய்து கொள்ளலாம் என கூறிவிட்டு, தற்போது மருத்துவ பரிசோதனைக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என முரளிதரனிடம் கூறியுள்ளது.
சிகிச்சை பெற முடியுமா என தங்களிடம் அனுமதி கேட்டு விட்ட பின்னரே, சிகிச்சைக்கு சேர்ந்ததாக முரளிதரன் எடுத்துக் கூறியும், அதனை ஏற்காத மருத்துவமனை நிர்வாகம், அவரை சிறைபிடித்து வைத்துள்ளது.
இது குறித்து முறையிட்டால், அறுவை சிகிச்சை செய்யும் கத்தியை காட்டி மிரட்டுவதாக நோயாளி முரளிதரன் பகிரங்க புகார் தெரிவித்துள்ளார்.
நோயாளி முரளிதரன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்சூரன்ஸ் திட்டத்தில் சிகிச்சை அளிப்பதாக கூறி, திருச்சி தென்னூரில் உள்ள அமைச்சர் நேருவின் உறவினர்கள் நடத்தும் மருத்துவமனை கெடுபிடி காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.