மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி வரும் 8ம் தேதி முற்றுகை போராட்டம் : 40-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு
Nov 28 2022 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி வரும் 8ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக அங்குள்ள அமைப்புகள் எச்சரித்துள்ளன.
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும், உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ம் தேதி திருமங்கலம் பகுதியில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் 40க்கும் மேற்பட்ட சங்கங்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் திருமங்கலத்தில் கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணப்புக்குழு சார்பில் 40க்கும் மேற்பட்ட சங்கங்கள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 8ம் தேதி கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.