கொடைக்கானலில் உள்ள கோணலாறு அணையில் உடைப்பு : அணையை மராமத்து செய்ய அரசுக்கு மக்கள் கோரிக்கை
Nov 28 2022 4:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொடைக்கானலில் அமைந்துள்ள கோணலாறு அணை உடைப்பு எடுத்திருப்பதால் அதனை சரிசெய்யும் பணியில் கிராம மக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள கவஞ்சி கிராமத்தின் அருகே அமைந்துள்ளது கோணலாறு அணை. இந்த அணையின் நீர் சுற்றுப்புற மலை கிராம மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கும் ஆதாரமாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாகவே கோணலாறு அணையில் நீர்க்கசிவு இருப்பதை இப்பகுதி மலைவாழ் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் மூலம் எடுத்துரைத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அணை உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் அதனை சரி செய்யும் பணியில் கிராம மக்களே ஈடுபட்டுள்ளனர். கற்கள், மணல் மூட்டைகள் போன்றவற்றை கொண்டு அணையை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உடனடியாக அரசு இதில் கவனம் செலுத்தி இந்த அணையை சீரமைக்க வேண்டும் என கவுஞ்சி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.