மரக்காணம் அருகே கிடப்பில் உள்ள மீன்பிடி துறைமுகப் பணிகளை தொடங்க கோரிக்கை : 19 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Nov 28 2022 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகப் பணிகளை தொடங்க வலியுறுத்தி 19 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மரக்காணம் பகுதியையொட்டி கூனிமேடு குப்பம், அழகன்குப்பம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட 19 மீனவ கிராமங்கள் உள்ளன. அங்குள்ள மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையில் மரக்காணம் அருகே உள்ள அழகன் குப்பம் என்ற கடல் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி தொடங்கியது.

235 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வந்த இப்பணி, ஆரம்ப நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டது. இதனால் விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடி துறைமுகம் இல்லாத காரணத்தால் கடலில் நிறுத்தி வைக்கப்படும் பெரிய படகுகள் அடிக்கடி கடலில் மூழ்கிவிடுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகப் பணிகளை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தையொட்டி கூனிமேடுக்குப்பத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00