பா.ம.க.வினர் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை
Nov 28 2022 5:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் கல் வீசித் தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பா.ம.க. ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றுவிட்டு திரும்பிச் சென்றபோது, அங்கிருந்த பா.ம.க.வினர் மீது மர்மநபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். கல்வீச்சில் ஈடுப்பட்டவர்களை கைது செய்யக்கோரி பா.ம.க-வினர், நாகை-நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பாமக மாவட்ட செயலாளர் அளித்த புகாரின் பேரில், நாகை மருந்து கொத்தள தெருவை சேர்ந்த அஸ்வின், விக்னேஷ், பிரதீப் மற்றும் செட்டி தெருவை சேர்ந்த விஜய் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.