கும்மிடிப்பூண்டி அருகே கோயில் உண்டியலில் இருந்து ரூ.3 லட்சம் திருட்டு
Nov 28 2022 5:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பழமை வாய்ந்த மாத்தம்மன் கோயில் உண்டியில் இருந்து சுமார் மூன்று லட்சம் ரூபாய் பணம் திருடு போய் உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார் பாளையத்தில் பழமை வாய்ந்த மாத்தம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கோயில் சுற்றுச்சுவரின் வெளிப்புற இரும்பு கதவுகள் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கோயில் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, கோயில் திருவிழாவிற்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த மூன்று லட்ச ரூபாய் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதி செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.