தனியார் சாய தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து : தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்
Nov 28 2022 5:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தனியார் சாய தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. பழனி அருகே உள்ள சாமிநாதபுரத்தில் ஏராளமான நூற்பாலைகள், பேப்பர் மில் அட்டை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தனியார் சாய தொழிற்சாலையில் நூலுக்கு சாயம் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு, உள்ள பாய்லர் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.