கோவையில் புது வகை போதைப் பொருள் விற்பனை செய்த 2 இளைஞர்கள் கைது
Nov 28 2022 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவையில் புதிய வகை போதைப் பொருளை விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பஸ் நிறுத்தம் அருகே மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். அவர்களை சோதனை செய்ததில் விற்பனைக்காக சிறிய அளவிலான குப்பிகளின் போதை பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அசாருல் இஸ்லாம், அப்துல் முத்தலீப் ஆகியோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், அவர்கள் விற்பனை செய்து வந்தது எந்த வகை போதை பொருள் என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.