திம்பம் மலைப்பாதையின் கொண்டைஊசி வளையில் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து
Nov 28 2022 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையின் கொண்டை ஊசி வளைவில் கரும்பு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று, திம்பம் மலைப்பாத வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது 23வது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த கரும்புகள் சாலையில் சரிந்து விழுந்தன. லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.