கோபிசெட்டிபாளையம் அருகே கனமழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்கள் அவதி
Nov 28 2022 5:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வனசரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கனமழை பெய்வதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொட்டகோம்பை, கரும்பாறை, வேதபாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால், கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள வேதபாறை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சத்தியமங்கலம்-பவானி நெடுஞ்சாலையில் உள்ள தரைமட்ட பாலத்தை முழ்கியபடி வெள்ளநீர் செல்வதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதியுற்றனர். இதேபோல் சஞ்சீவிராயன் ஏரி நிரம்பி வரப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஓடைபகுதியையொட்டிய கிராமப்புற மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.