வேகமாக பைக் ஓட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை வகுக்க கோரிய வழக்கு... 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Nov 28 2022 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேகமாக பைக் ஓட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், விதிகளை வகுக்க கோரியும், உரிய அனுமதியின்றி பைக்-களை மாற்றியமைத்து பயன்படுத்துவதை தடுக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வு, 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.