ராமநாதபுரத்தில் சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு நடுத்தெருவில் நிறுத்திய மகன் : மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் விட்டு கதறிய மூதாட்டி
Nov 28 2022 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரத்தில், சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு மகன் நடுத்தெருவில் நிறுத்தியதாக மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி புகார் தெரிவித்துள்ளார். தனது சொத்துகளை மகனிடம் இருந்து மீட்டு தருமாறு மூதாட்டி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்ப்போம்....
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடைபெற்ற குறைதீர் முகாமில் பங்கேற்ற சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி வள்ளி, மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தனக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு மகன் நடுத்தெருவில் நிறுத்தியதாக மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்.
மகன் கூறிய வாக்குறுதியை நம்பி, பத்திரம் மற்றும் பட்டா மாற்றம் செய்து கொடுத்ததாகவும், கடைசி காலத்தில் மகன் தன்னை ப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் ஏமாந்து கையெழுத்து போட்டு விட்டதாகவும் மூதாட்டி வள்ளி வேதனையுடன் குறிப்பிட்டார்.
மகன் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும், மருமகளோ, தன்னை அடித்து துன்புறுத்தவதாகவும் விரக்தியுடன் கூறுகிறார் மூதாட்டி வள்ளி.
தன்னுடைய நிலத்தை மீண்டும் தனக்கு திரும்ப பெற்று தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் வள்ளி மனு ஒன்றை அளித்துள்ளார். ஆட்சியர் முன்னிலையில் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு மூதாட்டி கதறி அழுத காட்சி, ஆட்சியர் அலுவலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.