தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு - டிசம்பர் 15 தொடங்கி 23 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தகவல்
Nov 29 2022 6:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிசம்பர் 15 ஆம் தேதி முதல், பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில், அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் எனவும், இதில் 6, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்குக் காலையிலும், 7, 9, 11 ஆம் வகுப்புகளுக்குப் பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.