மக்கள் நலனையே உயிர்மூச்சாகக் கொண்டு அரும்பணியாற்றிய புரட்சித்தலைவி அம்மாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் - டிசம்பர் 5-ம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடத்தில், அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, மலரஞ்சலி செலுத்துகிறார்
Nov 29 2022 7:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறைந்த முதலமைச்சர் மாண்புமிகு அம்மாவின் 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, டிசம்பர் 5-ம் தேதி, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அம்மா நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாக, கழகப் பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அஇஅதிமுக பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா, தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தன் இறுதிமூச்சு வரை பாடுபட்டவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிர் தொண்டர்களின் நலனில் அக்கறை கொண்டு, தன்னலமின்றி பொதுநலத்தோடு "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய ஒப்பற்ற மக்கள் தலைவி, நம் ஒவ்வொருவரின் இதயங்களிலும் எந்நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் - புரட்சித்தலைவர் வகுத்துக்கொடுத்த பாதையில் அடிபிறழாமல், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா கடைபிடித்து வந்த ஒப்பற்ற கொள்கைகளைப் பின்பற்றி அதே வழியில் நாமும் தொடர்ந்து பயணித்திட, அம்மாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ம் தேதி திங்கள்கிழமை காலை 11 மணிக்கு, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கழகத் தொண்டர்களோடு சேர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மாவின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புனித நிகழ்வில், புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவியின் பாசறையில் பயின்ற பாசமிகு தொண்டர்களும், கழகத்தின் அனைத்துப்பிரிவு நிர்வாகிகளும், புரட்சித்தலைவி அம்மாவை தங்கள் முன்மாதிரியாக மனதில் வைத்து, தன்னம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்கப்பெண்களும், இளம் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்களும், ஜாதிமத பேதமின்றி, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக, அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.