தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் கூடுதல் இழப்பீடு வேண்டும் - பாதிக்கப்பட்டோர் தரப்பு கோரிக்கை
Nov 29 2022 8:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி தலா 5 லட்சம் ரூபாய் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளாக தாங்கள் பல இன்னல்களை சந்தித்து வருவதாக தெரிவித்தனர். எனவே, ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும் என்றம், தங்களுடைய வேலை வாய்ப்பு திரும்ப வழங்கப்பட வேண்டும் எனவும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டனர்.