வேலூர் அருகே அமைச்சர் துரைமுருகனை வரவேற்க பேனர் கட்டியபோது விபரீதம் - மின்சாரம் தாக்கி திமுக நிர்வாகி பலி
Nov 29 2022 7:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் அருகே அமைச்சர் துரைமுருகனை வரவேற்க பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கே.வி.குப்பம் அடுத்த பி.கே.புரம் பகுதியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் உட்பட எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். இதற்காக அமைச்சர் துரைமுருகனை வரவேற்று விளம்பர பேனர்களை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வடுகந்தாங்கல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மார்கபந்து உள்ளிட்ட இருவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த இருவரும், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மார்கபந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.