ஆட்களை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக சீமான் மீது சந்தேகம் - முன்னாள் காவல்துறை அதிகாரி அனுசியா பரபரப்பு குற்றச்சாட்டு
Nov 29 2022 8:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜீவ் காந்தியை தாம் தான் கொன்றேன் என கூறிவரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆட்களை வைத்து தன்னை கொலை மிரட்டல் செய்கிறார் என்ற சந்தேகம் உள்ளதாக முன்னாள் காவல்துறை அதிகாரி அனுசியா தெரிவித்துள்ளார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளருமான அனுசியா, சென்னை காவல் ஆணையரை சந்தித்து, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு வழங்குமாறு மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நளினி விடுதலை குறித்து பேட்டி அளித்தால் கொலை செய்து விடுவதாக சிலர் மிரட்டுவதாக தெரிவித்தார்.