சென்னை அண்ணா நகரில் பட்டாக்கத்தியுடன் வாகன ஓட்டிகளை மிரட்டும் ரவுடிக் கும்பல் - தேநீர் கடையில் செல்போன் பறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு
Dec 2 2022 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அண்ணா நகரில் நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் வாகன ஓட்டிகளை ரவுடி கும்பல் மிரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அண்ணாநகர் நான்காவது பிரதான சாலையில் உள்ள க்யூ பிளாக் பகுதியில் நள்ளிரவு 11:30 மணி அளவில் சாலையில் ரவுடிகள் சிலர் கையில் கத்தியுடன் நின்று கொண்டு அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை மிரட்டினர். பின்னர் அங்கிருந்த ஒரு டீக்கடைக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களை கையில் இருந்த கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதே சாலையில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளின் குடியிருப்பும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.