அன்னூர் தொழிற்பேட்டைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு : விவசாயிகளுக்கு ஆதரவாக அன்னூரில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
Dec 8 2022 1:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களை கைப்பற்றினால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில்பேட்டை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 5 ஊராட்சிகளில் 3 ஆயிரத்து 731 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்த அரசு அரசாணையும் வெளியிட்டுள்ள நிலையில் இதற்கு இந்த பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் அன்னூர் பகுதி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க சார்பில் அன்னூர் பேருந்து நிலையம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் தமிழக பா.ஜா.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அன்னூரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதாகவும், தொழில் பேட்டை அமைக்க தமிழக அரசு விவசாய நிலத்தை எடுத்தால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் திரு.அண்ணாமலை எச்சரித்தார்.