கருணாநிதி நினைவாக மெரினா கடலில் 137 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடும் எதிர்ப்பு - 81 கோடி ரூபாயில் திட்டத்தை செயல்படுத்த உள்ள நிலையில் மீனவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு

Feb 1 2023 6:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

கருணாநிதி நினைவாக மெரினா கடலில் 137 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடும் எதிர்ப்பு - 81 கோடி ரூபாயில் திட்டத்தை செயல்படுத்த உள்ள நிலையில் மீனவர் அமைப்பினர் கடும் எதிர்ப்புசென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் வைப்பது தொடர்பாக கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கூட்டம் ரணகளமானது...மீனவர் அமைப்பை சேர்ந்த அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி, மீனவர் அமைப்பினர், மே-17 இயக்கத்தினர், சமூக ஆர்வலர் முகிலன் உள்ளிட்ட பலர் கடலில் பேனா சின்னம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக மெரினா கடற்கரை கடலில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக திமுக அரசு கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் காமெடிக் கூட்டம் ஒன்றை சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தியது. இதில், கலந்து கொண்ட பலரும் பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பேனா நினைவு சின்னத்தை கடலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் சமூக பிரமுகரான அண்ணாதுரை என்பவர் பேசுகையில், பேனா என்பது பாக்கெட்டில் தான் இருக்கவேண்டுமே தவிர, கடலில் இருக்கக்கூடாது என தெரிவித்தார். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் கடலில் பேனா நினைவு சின்னம் வைக்க மீனவ சமுதாயம் சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.

பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பேசுகையில், நினைவு சின்னம் கடலுக்குள் தேவை இல்லை என்றதுடன், கடலுக்குள் வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும் என்றார்.

சமூக ஆர்வலரான முகிலன் எதிர்ப்பு தெரிவித்து பேசுகையில், அவரை பேசவிடாமல் மைக்கை அணைத்ததால் மேடையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். காவல்துறையினர் அவரை சமாதான படுத்தி எழுப்ப முயன்றபோதிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், முகிலனை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜி எம் சங்கர் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, திமுக ஆதரவாளர்கள் அவரை வெளியேறச் சொல்லி கூச்சலிட்டு மிரட்டல் விடுத்ததால் கூட்டத்தில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது...

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த பெண் ஒருவர் பேனா நினைவு சின்னம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுகையில், பேனா சின்னம் வைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதி யாருடைய பணம் என்று கேள்வி எழுப்பி அது மக்களின் வரிப்பணம் என்று கருத்து தெரிவித்தார்.

மொத்தத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய பேனா சின்னம் வைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் ஆக்கப்பூர்வமாக இல்லாமல் பொதுமக்களின் கருத்துகளை எதிர்க்கும் விளம்பர அரசின் அடாவடி கும்பலின் கூட்டமாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையல்ல...
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00