மோசமான நிலையில் காணப்படும் திண்டுக்கல்-பழனி சாலை : பாதயாத்திரை செல்ல முடியவில்லை என பக்தர்கள் வேதனை
Feb 1 2023 4:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கலில் இருந்து பழனிக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக இருப்பதால், பாதயாத்திரை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பழனி முருகன் கோவிலில் தற்போது தைப்பூச திருவிழா நடைபெற்று வருவதால், ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கலில் இருந்து பழனிக்கு செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதாகவும், பாத யாத்திரைக்காக அமைக்கப்பட்ட தனிச்சாலைகளும் சேதமடைந்து உள்ளதாகவும் வேதனை தெரிவித்த பக்தர்கள், கழிப்பறை, குளியலறை போன்ற வசதிகளும் இல்லை என கவலை தெரிவித்தனர்.