திருப்பூரில் தனியார் பேருந்து நடத்துனரை தரக்குறைவாக பேசிய பெண் போக்குவரத்து காவலர் - வீடியோ காட்சி வைரல்
Feb 1 2023 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரில் தனியார் பேருந்து நடத்துனரை, பெண் போக்குவரத்து காவலர் ஒருவர் தரக்குறைவாக பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. காங்கேயம் அருகே கொடுமுடியில் இருந்து திருப்பூரை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, புதூர் பிரிவு அருகே பயணிகளை இறங்கிவிட்டு கிளம்பியது. அப்போது நடத்துனர் பின்புற படிக்கட்டில் ஸ்டைலாக ஏறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவ்வழியே வந்த பெண் போக்குவரத்து காவலர் ஒருவர், பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.