நாகர்கோவில்: ஆட்சியர் அலுவலகத்தில் பாட்டு பாடி தர்ணாவில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி
Feb 1 2023 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லிப்ட் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்த மாற்றுத்திறனாளி ஒருவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் லிப்ட் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்த மாற்றுத்திறனாளி கணேசன் என்பவர், பணி வழங்காமல் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன், அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு குடியிருப்பிற்கு வழங்கப்பட்ட குடிநீர், மின்சாரம் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த மாற்றுத்திறனாளி கணேசன், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமர்ந்து பாட்டு பாடி தர்ணாவில் ஈடுபட்டார்.