வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும் : சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு
Feb 1 2023 4:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தொடர்ந்து, நாளை முதல் வரும் 4ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.