மதுரை: உசிலம்பட்டி அருகே அங்கன்வாடிக்குள் புகுந்த பாம்பை பிடிக்கும் வீடியோ வைரல்
Feb 1 2023 4:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வின்னகுடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அடிக்கடி பாம்புகள் புகுவதால் குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கன்வாடி மையத்தின் சமையல் அறைக்குள் புகுந்த பாம்பு ஒன்றை, இளைஞர் ஒருவர் பிடிக்கும் வீடியோ காட்சிகள், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.