கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் : சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை தகவல்
Feb 1 2023 6:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சிபிசிஐடி காவல்துறை, ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், வழக்கு விசாரணையை முறையாக நடத்தக் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, விசாரணையின் தற்போதைய நிலை என்ன என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, விசாரணை நிலை குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் தாக்கல் செய்தார். மாணவி பயன்படுத்திய செல்ஃபோன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அரசு வழக்கறிஞர், தடயவியல் துறை அறிக்கை கிடைத்தவுடன் ஒரு மாதத்தில் விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறினார்.