அஇஅதிமுக என்ற பேரியக்கத்தை சிதற விடாமல் ஒன்று சேர்த்து வென்று காட்டுவோம் - கழக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா சூளுரை

Mar 24 2023 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

கட்சியை சிதற விடாமல், ஒன்று சேர்த்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா சூளுரைத்துள்ளார்.

நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்ரீசுவேதாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னமா சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

கொடிமரத்து விநாயகர் சன்னதியில் சின்னம்மா தரிசனம் செய்தார். அப்போது கோயில் அர்ச்சகர் பாபு குருக்கள், புரட்சித்தாய் சின்னம்மாவிடம் சூரியன், சந்திரன், அக்னி என முக்குள தீர்த்தங்களை வழங்கினார். அதன் பின்னர் பெரிய வாரண பிள்ளையார் சன்னதி, மூலவர் சுவேதாரண்யேஸ்வரர், அருள்மிகு சுவேத மகா காளி அம்மன் சன்னதி, சிவகாமி நடராஜர் சன்னதி, ஸ்ரீஅகோர மூர்த்தி சன்னதி, ஸ்ரீ பிரமவித்யாம்பிகை அம்மன் சன்னதி, புதன் சன்னதி, பிரம்மசமாது சன்னதி, ஸ்ரீ சௌபாக்கிய துர்க்கை அம்மன் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளில் தரிசனம் செய்தார்.

கோவிலில் இருந்த ஏராளமானோர் அ.இ.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மேலும் அ.இ.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் அங்கிருந்த பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

கோவில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்டசபையில் பேசுவதற்கு உரிமை உண்டு என கூறினார். அதிமுக என்பது தலைவர் போட்ட விதை என்றும்,. அதை புரட்சித் தலைவி அம்மா வளர்த்ததாகவும் தெரிவித்த சின்னம்மா, கட்சியை சிதற விடாமல், ஒன்று சேர்த்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான வெற்றி பெறச் செய்வேன் என சூளுரைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00