தமிழக கேரளா எல்லை பகுதியில் உணவு, தண்ணீர் தேடி சாலைக்கு வரும் வன விலங்குகள் : புலி, யானைகள் உலா வரும் வீடியோ காட்சிகள்
Mar 25 2023 3:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டதால் விலங்குகள் சாலையோரம் உலா வரும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் வனத்தில் இருக்கும் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நீர் தேடி சாலையோர பகுதிகளில் உலா வருகின்றன. பரம்பிக்குளம் வழி சாலையில் ஒற்றை சிறுத்தை உலா வந்து கொண்டிருந்த வீடியோ வெளியாகியது. இதேபோல் வால்பாறை கவர்கல் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை பலா மரத்திலிருந்து பலா பறிக்கும் காட்சியும் வெளியாகியுள்ளது.