திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் 17 வயது சிறுமி தற்கொலை? : சிறுமியின் குடும்பத்தாரிடம் சார் ஆட்சியர் விசாரணை

Mar 25 2023 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தூக்‍கில் தொங்கியபடி 17 வயது சிறுமியின் உடல் மீட்கப்பட்ட நிலையில், வரதட்சணை கொடுமை காரணமாக கொலை செய்யப்பட்டதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவையைச் சேர்ந்த சௌதாமணி என்பவர், 11ம் வகுப்பு படித்து வந்த தனது மகள் தர்ஷினியை, 16 வயதிலேயே, பல்லடம் மஞ்சப்பூரை சேர்ந்த குமார் என்பவருக்‍கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணமாகி ஒருவருடம் ஆன நிலையில், குமாரின் வீட்டார் வரதட்சனை கேட்டு தர்ஷினியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தர்ஷினி தூக்‍கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், தகவல் அறிந்த பெண்ணின் வீட்டார், மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்‍குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் அரசு மருத்துவமனைக்‍கு வந்து தர்ஷினியின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00