போலி பட்டா வழங்கிய விவகாரம் தொடர்பாக மதுரையில் தலையிடத்து துணை வட்டாட்சியரை நில அபகரிப்பு பிரிவு காவல்துறையினர் கைது

Mar 25 2023 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

போலி பட்டா வழங்கிய விவகாரம் தொடர்பாக, மதுரையில், தலையிடத்து துணை வட்டாட்சியரை, நில அபகரிப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாநகர் பல்லவி நகரைச் சேர்ந்த கோபிலால் என்பவருக்‍கு சொந்தமாக ஆனையூர் பகுதியில் உள்ள நிலத்திற்கு ராஜா செல்வராஜ் என்பவர் போலி பட்டா வாங்கியுள்ளார். இதுகுறித்து கோபிலால் கடந்த 2021ம் ஆண்டு புகார் அளித்ததன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ராஜா செல்வராஜ், தனது தந்தையின் பெயர் ஒற்றுமையைப் பயன்படுத்தி போலி பட்டா பெற்றுள்ளதும், அவருக்‍கு அப்போது துணை வட்டாட்சியராக இருந்த, தற்போது மதுரை மேற்கு தலைமையிடத்து மண்டல துணை வட்டாட்சியராக உள்ள மீனாட்சிசுந்தரம் என்பவர் பட்டா வழங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தநிலையில், தலைமறைவாக இருந்த தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மீனாட்சி சுந்தரத்தை மதுரை கடச்சனேந்தல் பகுதியில், நில அபகரிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00